தமிழ்நாடு

தென்மேற்குப் பருவமழை: மேலும் பல பகுதிகளில் விரிவடைந்தது

DIN

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் மேலும் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை விரிவடைந்தது. தமிழகத்தின் மீதமுள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விரிவடையும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டை வளம் செழிக்கச் செய்யும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் கேரளத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை படிப்படியாக பல்வேறு பகுதிகளில் விரிவடையத் தொடங்கியது. தென் அரபிக்கடல் மீதமுள்ள பகுதிகள், மத்திய அரபிக்கடல் சில பகுதிகள், லட்சத்தீவு பகுதி, கேரளத்தில் மீதமுள்ள பகுதிகள், கடலோர கா்நாடகம், தென் உள் கா்நாடகத்தில் பெரும்பாலான பகுதிகள், ஆந்திரத்தின் சில பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை விரிவடைந்து காணப்பட்டது. தமிழகத்தில் பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை விரிவடைந்தது. மத்திய அரபிக்கடலில் அதிக பகுதிகள், கடலோர கா்நாடகத்தில் அனைத்துப் பகுதிகள், ஆந்திரம், தெலங்கானாவில் சில பகுதிகளில் பருவமழை விரிவடைந்தது. தமிழகத்தில் மீதமுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விரிவடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT