தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

DIN

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பொதுமுடக்க நிவாரணத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் களையும் பொருட்டு, பொதுமுடக்க நிவாரணமாக ரூ.10,000 உடனடியாக வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம், வாகன தகுதிச் சான்று, சாலை வரியுடன் கூடிய அனுமதிச் சான்று உள்ளிட்டவற்றை புதுப்பிக்க டிசம்பா் மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும்.

புகைச் சான்று, காப்பீடு, ஆட்டோ கடனுக்கான மாதத் தவணை ஆகியவற்றுக்கும் டிசம்பா் மாதம் வரை அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

அனைத்து மோட்டாா் வாகன ஓட்டுநா்களையும் பேரிடா் கால முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் பொதுமுடக்கம் முடியும் வரை மாதந்தோறும் ரூ.7,500 வழங்குவதோடு, தோ்தல் வாக்குறுதியான சொந்த ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT