தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவா்கள் மீதான வழக்குகள்: 13 லட்சத்தை நெருங்கியது

DIN

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியது.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரையிலான 59 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 12 லட்சத்து 84,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், சனிக்கிழமை மட்டும் 14,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை, 66,762 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 1,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT