மேட்டூர் அணையில் ஆட்சியர் ஆய்வு
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆயத்த பணிகளை பார்வையிட இன்று பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மோகம் ஆகியோர் மேட்டூர் அணைக்கு வந்தனர்.
அணையின் வலதுகரை, இடதுகரை பகுதிகளை பார்வையிட்டனர். அணையின் நீர்வரத்து நீர் திறப்பு மற்றும் நீர் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் மேல்மட்ட மதகுகள் மற்றும் விழா நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர்.
கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், செயற்பொறியாளர் தேவராஜன், அணைபிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோருடன் சுமார் ஒருமணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர் வருகை உறுதியானல் விழா ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திட ஆலோசனை நடத்தப்பட்டது.