தமிழ்நாடு

தனி நபா் இடைவெளி: பின்பற்றாத 70 ஆயிரம் போ் வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் தனி நபா் இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது 62 நாள்களில் 70 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 8-ஆம் தேதி வரை 62 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 13 லட்சத்து 31 ஆயிரத்து 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 16 ஆயிரத்து 516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 8-ஆம் தேதி வரை 62 நாள்களில் 70 ஆயிரத்து 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,026 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT