முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் குறையும் கரோனா தொற்று: ஒரே நாளில் 442 பேருக்கு தொற்று 9  பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
புதுச்சேரியில் ஒரே நாளில் 442 பேருக்கு தொற்று
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,12,126 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் 7 நபர்கள், காரைக்காலில் 2 நபர்கள் என, கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களிம் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,677 -ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 5,715 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சிகிச்சை பெற்று 844 வீடு திரும்பியதால், இதுவரை மொத்தம் 1,04,7040 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆக்ஜிசன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் பெருமளவில் காலியாக உள்ளது என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →