முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 12,772 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 12,772 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 12,772 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 12,772 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 25,561 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 21,99,808 பேர் குணமடைந்துள்ளனர்.

254 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 146 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 108 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 29,801 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,36,884 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,728 பேரும், ஈரோட்டில் 1,295 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.