முகப்பு
வணிகம்

குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்தின் 61.9% பங்குகளைக் கையகப்படுத்திய மேக்னம் ஐஸ்கிரீம்!

மேக்னம் ஐஸ்கிரீம், குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்தின் 61.9 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தும் செயல்முறையை நிறைவு செய்தது.

Updated On : 31 மார்ச் 2026, 6:45 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: நெதர்லாந்து நிறுவனமான மேக்னம் ஐஸ்கிரீம், குவாலிட்டி வால்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் 61.9 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தும் செயல்முறையை நிறைவு செய்ததையடுத்து, நிறுவனத்தின் குழுவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கையகப்படுத்தல் நடவடிக்கை, ஜூன் 25, 2025 அன்று கையெழுத்திடப்பட்ட பங்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மேக்னம் ஐஸ்கிரீம் நிறுவனம் மற்றும் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

இதனையடுத்து, குவாலிட்டி வால்ஸ் நிறுவனம் தனது உயர்மட்ட நிர்வாகத்திலும் சில மாற்றங்களை அறிவித்தது.

Advertisement

Advertisement

அபிஜித் பட்டாச்சார்யா நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகவும், இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் நியமிப்பதற்கு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரிதேஷ் திவாரி நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

summary

Magnum Ice Cream Netherlands has completed the acquisition of a 61.9 per cent majority stake in Kwality Wall's (India) Ltd (KWIL).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.