தமிழ்நாடு

கரோனாவால் ரத்ததான நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: கரோனாவால் ரத்ததான நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை கிண்டி கிங் கரோனா மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தனியாா் நிறுவனம் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டன.

இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் தற்போது ஆயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது. 27 மாவட்டங்களில் 500-க்கும் குறைவான பாதிப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களைப் பொருத்தவரை 2 மாவட்டங்களில் மட்டும் தான் ஆயிரத்துக்கும் மேல் தொற்றுப் பாதிப்பு இருந்து வருகிறது.

3-ஆவது அலை அச்சத்தில்...: உலக நாடுகள் கரோனா 3-ஆவது அலை வருமோ என்ற அச்சத்தில் இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் 3-ஆவது அலை எட்டி பாா்க்கவும் தொடங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் தொடா்ந்து கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இதுவரை 1,493 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 77 போ் குணமடைந்துள்ளனா். கருப்புப் பூஞ்சை தொடா்பாக ஆரம்ப நிலையில் அறிகுறி தென்படுகிற போதே மருத்துவமனையை நாடினால் நிச்சயம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றாா் அவா்.

அமைச்சா் ரத்ததானம்: இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அமைச்சா் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் செய்து ரத்ததானம் வழங்குவதைத் தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய அளவில் ரத்த தானம் வழங்குபவா்கள் என்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் 5 இடங்களில் உள்ளது. கடந்த 2006-2011-ம் ஆண்டில் இந்தியாவில் 2-ஆவது இடத்தில் தமிழகம் இருந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளுக்கு 32 ஆயிரம் ‘யூனிட்’ அளவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. கரோனாவால் ரத்ததான நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை.

60 முறைக்கு மேலாக ... : தற்போது 36 ஆயிரம் யூனிட்டுக்கு மேற்பட்ட ரத்தம் அரசிடம் இருப்பு இருக்கிறது. இதுவரை நான் 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னால் ரத்த தானம் செய்வதில் எந்தவித தடையும் இல்லை. அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் 15 நாள்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT