தமிழ்நாடு

திருத்தணியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சந்திரன் வழங்கினார்

DIN

திருத்தணி: ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளிகளுக்கு சத்துணவு தட்டு, சமையலர்களுக்கு கவச உடை போன்ற பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சந்திரன் இன்று வழங்கினார்.

திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய ஆணையர் குலசேகரன் தலைமையில் இன்று நடந்தது.

கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு அனைவரையும் வரவேற்றார். இதில், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பங்கேற்று, 15 ஏழை மற்றும் விதவை பெண்களுக்கு தையல் இயந்திரம், ஒரு பெண்ணுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை வழங்கினார்.

இதுதவிர, 73 பள்ளிகளுக்கு தலா 6 சோப்பு, 6 டவல், சமையலர்களுக்கு கவச உடைகள், ஒரு பள்ளிக்கு, 10 சத்துணவு தட்டுகள் வீதம், 30 பள்ளிகளுக்கு 300 தட்டுகளும் எம்.எல்.ஏ. சந்திரன் வழங்கினார். பின் பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய அலுவலக மேலாளர் ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, சமூக நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களிலும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சிகள் திருத்தணி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கதனம், துணைத்தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, திமுக திருத்தணி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆர்த்தி ரவி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT