தமிழ்நாடு

கடந்த இரு நாள்களில் ரூ. 292 கோடிக்கு மது விற்பனை

DIN

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ. 127 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. 

தமிழகத்தில் கரோனா பரவல்,, ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. 

இதையடுத்து திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகளில் ரூ. 165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ரூ. 127 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. 

அதிகபட்சமாக நேற்று மதுரையில் ரூ. 37.28 கோடிக்கும் அதன் தொடர்ச்சியாக  சென்னை - ரூ. 33.41 கோடி, சேலம் -ரூ. 28.76 கோடி, திருச்சி- ரூ. 27.64 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. 

இதனால் இரு தினங்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ. 292 கோடிக்கு நடைபெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT