முகப்பு
தமிழ்நாடு

திருக்குவளையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருக்குவளையிலுள்ள கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்து அங்குள்ள திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திருக்குவளையிலுள்ள கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்து அங்குள்ள திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நாகை மாவட்டம் திருக்குவளையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்து கலைஞர் மற்றும் முரசொலிமாறன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு அங்கு உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக அங்குள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கௌதமன், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், ஊராட்சி மன்றத் தலைவர் இல.பழனியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி,
நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா.மலர்வண்ணன், பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.