முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 8,183 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 8,183 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 8,183 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 8,183 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 1,014 பேருக்கும், ஈரோட்டில் 933 பேருக்கும், சேலத்தில் 533 பேருக்கும், திருப்பூரில் 489 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 18,232 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 23,04,885 பேர் குணமடைந்துள்ளனர். 

180 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 31,015 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 78,780 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.