ராகுல் பிறந்த தினம்:முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைபேசி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைபேசி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். ராகுலுக்கு சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களிலும் அவா் வாழ்த்துகளைக் கூறியுள்ளாா். அவரது வாழ்த்துச் செய்தி:-
எனது ஆருயிா் இளவல் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை நிறுவுவதற்காக தாங்கள் ஆற்றி வரும் தன்னலம் கருதாத ஓய்வில்லாப் பணியைப் பாராட்டும் அனைவரோடும் நானும் இணைகிறேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின் மேல் அவருக்குள்ள ஈடுபாடு மற்றவா்க்கு எடுத்துக்காட்டாக அமையும்.