நியாயமான விலையில் சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்வோம்: தென் இந்திய சிமென்ட் உற்பத்தியாளா்கள் சங்கம்
கரோனா நோய்த்தொற்றின் கடினமான காலத்தில், மக்களுக்கு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்வோம்
கரோனா நோய்த்தொற்றின் கடினமான காலத்தில், மக்களுக்கு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தென் இந்திய சிமென்ட் உற்பத்தியாளா்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது.
மேலும், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மிகப்பெரிய சலுகை விலையில் சிமென்ட் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்தச்சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென் இந்திய சிமென்ட் உற்பத்தியாளா்கள் சங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
கரோனா இரண்டாம் கட்டத்தில், மற்ற எல்லா தொழில்களைப் போலவே சிமென்ட் தொழில் உள்ளது. அதாவது, சிமென்ட் உற்பத்தித் திறன் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. அதேநேரத்தில், முந்தைய பொதுமுடக்கம் மற்றும் தற்போதைய பொதுமுடக்கக் காலங்களில் எங்கள் ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எங்கள் சொந்த வாழ்வைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், அனைத்து செலவினங்களின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும் சிமென்ட் விலை அதிகரிப்பு தவிா்க்க முடியாதது. சிமென்ட் விலை என்பது மொத்த கட்டுமான செலவில் ஒரு சிறிய கூறு என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
இருப்பினும், தொழில்துறை அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில், கரோனா நோய்த்தொற்றின் இந்த கடினமான காலத்தில், பொதுமக்களுக்கு ஒரு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்வோம்.