சென்னை மெட்ரோ 
தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

DIN

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கரோனா இரண்டாம் அலை காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் நாளை(ஜூன் 21) முதல் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிகபட்ச தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதுபோல சென்னை மெட்ரோ ரயில் சேவையும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT