தமிழ்நாடு

ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது; முக்கிய அம்சங்கள் இல்லை: பழனிசாமி

DIN

ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இல்லை என்றும், ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது திமுக அரசு கமிட்டி அமைத்துள்ளது.

தற்போது நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது என்று விமர்சித்தார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும்,

விவசாயிகள் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு இல்லை எனவும் கூறினார்.

5 சவரன் வரை நகைக் கடன் ரத்து என்னும் திமுகவின் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்குவதற்காக தேர்தலுக்கு முன்னதாக திமுக கொடுத்த வாக்குறுதி பற்றிய அறிவிப்பும் இல்லை என்று பழனிசாமி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT