முகப்பு
தமிழ்நாடு

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைப்பு: ஆளுநர்

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தார். 

ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழக பொருளாதார இலக்கை எட்ட, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். 

குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலலலர் டாக்டர் எஸ்.நாராயணன் மற்றும் ஜீன் ட்ரெஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →