அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் 16-வது பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளயும் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு எடுக்கும்.
தமிழர்களுக்கு முன்னுரிமை:
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் 69% இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழக அரசு அலுவலகங்களில் பிறமாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேர உதவும் அரசாணை மாற்றி அமைத்து ரத்து செய்யப்படும்.
தமிழை இந்திய அலுவல் மொழியாக்க மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.
நிலத்தடி நீரை முறைப்படுத்த புதிய சட்டம்:
நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் குழுவில் இருப்பார்கள்.
திவர ஆக்சிஜனுக்கு ரூ.50 கோடி:
கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளயும் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு எடுக்கும்.
திவர ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடியும், மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலத்தின் பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பும், உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்று சட்டப்பேரவையில் ஆளுநர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.