முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 6,895 ஆக குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,895 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
தமிழ்நாட்டில் 6,895 ஆக குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,895 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,36,819  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 194 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 31580ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 13,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,65,375 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,15,05,639 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →