முகப்பு
தமிழ்நாடு

கூட்டத்தொடர் நிறைவு: சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜூன் 21 ஆம் தேதி(திங்கள்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கியது. 

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்தார். ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அடுத்த இரு தினங்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். 

இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →