தமிழ்நாடு

தமிழகத்தில் 3 பேருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மேலும் இருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

DIN

தமிழகத்தில் மேலும் இருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

உருமாறிய கரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான 'டெல்டா பிளஸ்' வகை கரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கரோனா வைரஸில் இருந்து உருமாறிய 'டெல்டா' கரோனா வைரஸின் உருமாறிய வடிவம் ஆகும். 

இதில் தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' வகை கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 1,100க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் மேலும் இருவருக்கு 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதி ஆகியுள்ளது. 

இதனால் தமிழகத்தில் மொத்தம் 3 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெங்களூரு ஆய்வகத்துக்குமாதிரிகள்  அனுப்பி பரிசோதனை முடிவுகள் வரத் தாமதமாவதால் விரைவில் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT