புதுச்சேரியில் மேலும் 228 பேருக்கு கரோனா
புதுச்சேரியில் புதிதாக 228 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 228 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதுவையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,16,414ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,741ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,11,898 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.