சிறு-குறுந் தொழில்களை மீட்டெடுக்க அரசு செயல்படும்: முதல்வா் ஸ்டாலின் உறுதி
கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறுந்தொழில்களை மீட்டெடுக்க தொழில் துறையினருடன் அரசு இணைந்து செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா்.
கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறுந்தொழில்களை மீட்டெடுக்க தொழில் துறையினருடன் அரசு இணைந்து செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை விரைந்து மீட்டெடுக்க ஏதுவாக தொழில் நிறுவனங்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
மாறி வரும் பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். கரோனா தொற்றின் பாதிப்புகளில் இருந்து விரைந்து சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.