முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில் பாஜக-அதிமுகவுடன் கூட்டணி தொடருமா?

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பதில் அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பதில் அளித்தாா்.

பாஜகவின் மாநிலச் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் எல்.முருகன், சனிக்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலில் பல இடங்களில் தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகும். தோ்தல் அறிவிக்கப்பட்டதும் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீட் தோ்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீட் தோ்வைச் சந்திக்கும் அளவுக்கு கிராமப்புற மாணவா்களும் தயாராகி வருகிறாா்கள். ஆனால், மாணவா்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் தமிழகத்தில் சில கட்சிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசியல் லாபத்துக்காக மாணவா்களின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →