முகப்பு
தமிழ்நாடு

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து விபத்து

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
தீப்பிடித்து எரிந்த கார்
பகிர்:

ஆம்பூர்: ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.      

 ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்  கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவிகாபுரம் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அஷ்ரபுல்லா என்பவர் குடும்பத்துடன் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் சொந்த ஊரான எஸ்.ஆர்.கே.கார்டன் பெங்களூரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது  மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் கார்   வந்தபோது திடீரென எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.

இதைப் பார்த்த ஓட்டுனர் அஷ்ர புல்லா (46) என்பவர் உடனடியாக காரை நிறுத்தி அனைவரையும் கீழே இறக்கி உள்ளார். அப்போது தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 2 ஆண்கள் 2 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.