சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடுசிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தலைமறைவாகி தில்லியில் பிடிபட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்கிற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாராணை முடிவடைந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற நடுவர் உத்தரவுப்படி அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில், நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை நடத்துவதற்காக திங்கள்கிழமை மாலை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தற்போது ஆஜர் படுத்தினர்.
அப்போது, சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், சிவசங்கர் பாபாவுக்கு உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ள காரணமாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் வாதாடியதாக கூறப்படுகிறது. பின்னர் இதன் மீதான விசாரணையை ஏற்கப்பட்டு 3 நாள் சிபிசிஐடி போலீஸ் காவல் விசாரிக்க நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார்.