மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: சென்னை உயர்நீதிமன்றம்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி தனியார் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது,
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும். இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து முகாமுக்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.