தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: ரோட்டரி சங்கத்தினர் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கம் சார்பில், நகரம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, ஈஎஸ்ஏஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும், கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத் தலைவருமான வி.எஸ்.வெங்கடேசன் கூறியது:

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், குறுநில மன்னர்கள் மற்றும் அசோகச் சக்கரவர்த்தி என நம்முடைய முன்னோர்கள் நட்டு வைத்த மரங்களால்தான் நாம் அனைவரும் சுவாசித்தோம். இயற்கை காற்றை ரசித்து, வாழ்ந்து வந்தோம்.

இப்போதைய காலங்களில், கஜா, நிஷா போன்ற பல்வேறு புயல்களால் மரங்கள் சாய்ந்து விடுகின்றன. சாலை வசதிகளுக்காகவும், மக்கள் பெருக்கத்தால் குடியிருப்புகளை கட்டுவது உள்ளிட்ட பல வகைககளிலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்கள் இல்லாததால் மழை பெய்யவில்லை. மழை பெய்யாததால், விவசாயம் செழிப்படையவில்லை. விவசாயம் இல்லாததால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படுகிறது.

மேலும், மக்களுக்கு நல்ல சுத்தமான காற்று இல்லாததால், உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் இல்லாததால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தள்ளப்படுகிறோம். இவை அனைத்துக்கும் முதல் காரணம், மரங்களை வெட்டுவதுதான். புயலில் விழுந்த மரம் விழுந்ததாகவே இருக்கட்டும். வெட்டப்பட்ட மரங்கள் வெட்டியதாகவே இருக்கட்டும்.

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கம் சார்பில், முதற் திட்டமாக, கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும்,50 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், அஞ்சலகம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், வங்கிகள் மற்றும் 24 வார்டுகளின் அனைத்துத் தெருக்கள் என மரங்களை நடப்படுகிறது. கூத்தாநல்லூர் நகரத்தை செழிப்பான, செழுமையான நகரமாக மாற்றப்படும். 24 வார்டுகளிலும் மரம் நடுவதற்காக விரைவில் இடத்தை தேர்வு செய்யப்பட உள்ளன. மேலும், விருப்பம் உள்ளவர்கள் தங்களது வீடுகளின் முன்பு நடுவதற்கு மரங்களைக் கேட்டால் வழங்கப்படும். 50 ஆயிரம் மரக்கன்றுகளையும் வரும் சுதந்திர தினத்தன்று, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர், மாவட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கப்பட உள்ளன என தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT