முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் கிறிஸ்துவ சபை டைல்ஸ் பதிப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில், கிறிஸ்துவ அமைப்பினர் டைல்ஸ் பதித்து, ஜெபித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் கிறிஸ்துவ சபை டைல்ஸ் பதிப்பு
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில், கிறிஸ்துவ அமைப்பினர் டைல்ஸ் பதித்து, ஜெபித்தனர். 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரியில், மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற  இரண்டு பள்ளிகளிலும் 70க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நிறுவனர் ப.முருகையன், மகேஸ்வரி முருகையன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். 

பனங்காட்டாங்குடி பள்ளியில், திருவாரூர் தென்னிந்திய திருச்சபையின், திருச்சி, தஞ்சை மற்றும் சேகரம் ஆகிய சர்ச்சுகளின் பாதிரியார் சுரேஷ் மற்றும் கிறிஸ்துவ சபையினர், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள, டைல்ஸ்களை, சுவர்களில் பதித்துள்ளனர். 

மேலும், மனோலயம் பள்ளிக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வழங்கினர். தொடர்ந்து, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் முன்பு ஸ்தோத்திரம் செய்தனர். நிகழ்வில், செயலாளர் பி.அறிவழகன், பொருளாளர் டி.கே.சேகர், பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.