முகப்பு
தமிழ்நாடு

ராயபுரம் சென்னையின் புதிய கரோனா அபாயப் பகுதியா?

சென்னையின் 15 மண்டலங்களில் கோடம்பாக்கம், அம்பத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பல மண்டலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராயபுரத்தில் கடந்த 8 நாள்களில் மட்டும் 9.3 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அத

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
ராயபுரம் சென்னையின் புதிய கரோனா அபாயப் பகுதியா?
பகிர்:


சென்னை: சென்னையின் 15 மண்டலங்களில் கோடம்பாக்கம், அம்பத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பல மண்டலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராயபுரத்தில் கடந்த 8 நாள்களில் மட்டும் 9.3 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதேவேளையில், 15 மண்டலங்களைக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ராயபுரத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 84 ஆக இருந்த நிலையில், மார்ச் 1-ம் தேதியான இன்று காலை நிலவரப்படி இது 134 ஆக அதிகரித்துள்ளது.

இது போலவே பிப்ரவரி 22-ஆம் தேதி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கோடம்பாக்கத்தில் 167 ஆகவும் அண்ணாநகரில் 154 ஆகவும், அம்பத்தூரில் 151 ஆகவும், திருவிக நகரில்  114 ஆகவும் இருந்தது.

இது இன்றைய நிலவரப்படி கோடம்பாக்கத்தில் 198 ஆகவும், அண்ணாநகரில் 170 ஆகவும், அம்பத்தூரில் 171 ஆகவும் திருவிக நகரில் 120 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதுபோலவே, பிப்ரவரி 22-ஆம் தேதி சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1627 ஆக இருந்த நிலையில் இன்று 1776 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மண்டலங்களைக் காட்டிலும் ராயபுரத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிரித்திருப்பதால், அபாயப் பகுதியாக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →