முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது

சென்னையில், செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 608 அதிரடியாக குறைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது
பகிர்:

சென்னையில், செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 608 அதிரடியாக குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. 

இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.608 குறைந்து, ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.76 குறைந்து, ரூ.4,266 ஆக உள்ளது. 

இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ரூ.72.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 குறைந்து, ரூ.72,000 ஆகவும் விற்பனையாகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,266

1 சவரன் தங்கம்...............................34,128

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,342

1 சவரன் தங்கம்...............................34,736

1 கிராம் வெள்ளி.............................73.60

1 கிலோ வெள்ளி............................73,600
 

முழு கட்டுரையைப் படிக்க →