புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர்  வே. நாராயணசாமி. 
தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாராயணசாமி!

புதுச்சேரி முன்னாள் முதல்வர்  வே. நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 

DIN

புதுச்சேரி முன்னாள் முதல்வர்  வே. நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 

புதுச்சேரியில் முன் களப்பணியாளர்களைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், புதன்கிழமை முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி மற்றும் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர். சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT