மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திடுகிறார் டிஆர்ஓ எஸ்.முருகதாஸ். உடன், ஆர்டிஓ ஜெ.பாலாஜி, வட்டாட்சியர் பி.பிரான்சுவா உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

DIN

மயிலாடுதுறை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. 

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ் தலைமை வகித்து முதல் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி, வட்டாட்சியர் பி.பிரான்சுவா, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறையினர், மக்கள் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

நிகழ்ச்சியை, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஆர்.சௌந்தரராஜன் தலைமையிலான மகளிர் திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

SCROLL FOR NEXT