ஊத்தங்கரையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு 
தமிழ்நாடு

ஊத்தங்கரையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், அச்சமின்றி தோ்தலில் வாக்களிக்கவும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், அச்சமின்றி தோ்தலில் வாக்களிக்கவும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தோ்தலில் வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

அதன்படி, ஊத்தங்கரை சேலம் மெயின் ரோடு எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர்  பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

இந்த அணிவகுப்பை ஊத்தங்கரை  காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அணிவகுப்பில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர்கள்  ஊத்தங்கரை முருகேசன், கல்லாவி முத்தமிழ்ச் செல்வன், சிங்காரப்பேட்டை குமரன் மற்றும் காவல்  உதவி ஆய்வாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.

இந்த கொடி அணிவகுப்பானது ஊத்தங்கரை எல்.ஐ.சி அலுவலகம் , திருவண்ணாமலை சாலை ,அரசு பேருந்து நிலையம் வழியாக , கல்லாவி சாலை , வட்டார வளர்ச்சி அலுவலகம் என சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT