முகப்பு
தமிழ்நாடு

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி: 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
கோப்புப்படம்
பகிர்:


திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

மதிமுக ஒப்புக்கொண்டதையடுத்து, இருகட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிவந்தார். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில் 6 தொகுதிகளில் அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதன்பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இதனை உறுதிபடுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →