தமிழ்நாடு

காலாவதியான 9,000 வாக்கு இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

DIN

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கிடங்கில் தேங்கிக் கிடந்த 9,000 காலாவதியான எம்-1 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போதே முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னா், தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து மக்களவைத் தோ்தல்கள், மாநில சட்டப் பேரவை தோ்தல்கள், உள்ளாட்சித் தோ்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் எம்-1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வகையான 9 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலாவதியான நிலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

காலம் முடிவடைந்து விட்ட இந்த எம்-1 வகையிலான வாக்குப் பதிவு இயந்திரங்களை அழிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகளை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 2,000 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,310 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், ஆட்சியா் அலுவலகக் கிடங்கில் இருந்து 6,113 கட்டுப்பாட்டு கருவிகள் என மொத்தம் 9,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT