முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி: ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட நகை, பணம் பறிமுதல்

சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ 90 ஆயிரம் பணம் பறிமுதல்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நகை, பணம்
பகிர்:

சீர்காழி: சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர்  அபிஷேக் (30 ). இவர் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை தனது காரில் 3.900 கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை பாலிஷ் போடுவதற்காக  சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது  சீர்காழி பைபாஸீல் கோயில் பத்து பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த மணிகண்டன், காவலர்கள் கார்த்தி, அன்பழகன் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் காரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது  அபிஷேக்  இடம் இருந்த  வெள்ளி நகை மற்றும்  ரூ.90  ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதனை அடுத்து பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் அவற்றை  பறிமுதல் செய்து சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகம் தாசில்தாருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →