திருச்சி விமான நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
விமானநிலைய ஆணையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய ஒப்பந்த விதிமுறைகளின்படி ஓய்வூதிய திட்டத்தை 1.1.2007 முதல் அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானநிலைய ஆணையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய ஒப்பந்த விதிமுறைகளின்படி ஓய்வூதிய திட்டத்தை 1.1.2007 முதல் அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பிறகும் அதற்கு உண்டான வட்டித் தொகையை ஒப்புக்கொண்டபடி செலுத்துவதில், விமான நிலைய ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும், இதுவரை நடைமுறை நடைமுறைப்படுத்தவில்லை.
இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து விமான நிலைய ஆணைய எம்ப்ளாயீஸ் யூனியன், சார்பில், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் விமான நிலைய ஆணைய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.