முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமைக்கு எதிராக அதிமுகவினர் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி தலைமையைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி தலைமையைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியானது தனி தொகுதியாகும். இப்பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை விட 36673 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் சந்திரபிரபா முத்தையா வெற்றி பெற்றார். தொடர்ந்து இந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார். 

இந்நிலையில் புதன்கிழமை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மான்ராஜ் என்ற நபரை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து வியாழக்கிழமை பேருந்து நிலையம் அருகே குவிந்த அதிமுக தொண்டர்கள் ஏற்கெனவே மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருக்கும் சந்திரபிரபாமுத்தையாவை வேட்பாளராக அறிவித்தால் தான் இத்தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்றும் மேலும் வெற்றி பெறும் இத்தொகுதியை அதிமுக தலைமை இழந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அதிமுகவினர் மணிக்கூண்டு அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

அதிமுகவினர் மறியலால் சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவரை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். மாவட்டத்தில் ஏற்கெனவே சாத்தூர் தொகுதியில் அதிமுகவினர் தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுகவினர் போராட்டம் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →