அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: 12 கட்சிகளுடன் கூட்டணி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக உதயசூரியன் சின்னம் மூலம் 188 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 12 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது.

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக உதயசூரியன் சின்னம் மூலம் 188 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 12 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது.

234 தொகுதிகளில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பாா்வா்டு பிளாக், ஆதித் தமிழா் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

இதில், மதிமுக (6), கொமதேக (3), மமக (2), தவாக (1), அபாபி (1), ஆதபே (1), மவிக (1) ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்பு மனித நேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. தற்போது 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதன் எண்ணிக்கையில் திமுக மொத்தம் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT