ஆலங்குளம் அருகே வாகன விபத்து: தந்தை பலி; மகன் படுகாயம்
ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் மகன் மீனாட்சிசுந்தரம்(42). இவர் தனது பைக்கில் மகன் அபிஷேக்குடன் (10) சிவ ராத்திரியை முன்னிட்டு முக்கூடல் பகுதியில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஆலங்குளம் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அடைக்கலபட்டணம் அருகேயுள்ள தனியார் தவிட்டு எண்ணெய் ஆலை அருகே வந்த போது, முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மீனாட்சிசுந்தரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் காயமைடந்தார்.
ஆலங்குலம் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீனாட்சி சுந்தரத்தின் உடல் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.