புதுச்சேரியில் பாஜக மகளிரணியினர் காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை, பாஜக மகளிரணியினர் திடீரென முற்றுகையிட்டனர்.
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹூடா கடந்த பிப்.8ஆம் தேதி மகளிர் தினவிழாவில், பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை, பாஜக மகளிரணியினர் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது காங்கிரசுக்கு எதிராக மகளிர் அணியினர் கோஷமிட்ட போது, காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குப்பைத்தொட்டி எடுத்து வீசி இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரண்டு கட்சி நிர்வாகிகளிடம் மோதல் ஏற்படும் பரபரப்பான சூழலில், பெரிய கடை காவல்துறையினர் தடுத்து அவர்களை வெளியேற்றுதல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.