முகப்பு
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
முல்லைப் பெரியாறு அணை
பகிர்:

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது.

தற்போது கோடைக் காலம் துவங்குவதற்கு முன்பாகவே அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டன. நீர்வரத்து முற்றிலுமாக நின்ற நிலையில், வியாழக்கிழமை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு பெரியாறு அணை தேக்கடி ஏரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பெரியாறு அணையில் 34.6 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 9.6மி.மீ., மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2,554 கன அணியாகவும், தேக்கடி ஏரியில் 9.6 கன அடியும் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 128.80 அடியிலிருந்து, 129.00 அடி உயரத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கும் விநாடிக்கு 803 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 303 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

அணை நிலவரம்
நீர் மட்டம் 129.00 அடி உயரமாகவும், ( மொத்த உயரம் 142 அடி ), நீர் இருப்பு 4482  மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 803 கன அடியாகவும், தமிழகம் பகுதிக்குத் தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 303 கன அடியாகவும் இருந்தது.

மின்சார உற்பத்தி
அணையிலிருந்து 303 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மூன்றாவது மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு,  25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →