தலைவாசலில் வாகனச் சோதனையில் ரூ.34 கோடி தங்க நகைகள், லாரி பறிமுதல்
தலைவாசலில் தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையின்போது, 234 கிலோ தங்க நகைகள் மற்றும் லாரியை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தலைவாசல்: தலைவாசலில் தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையின்போது, 234 கிலோ தங்க நகைகள் மற்றும் லாரியை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் தேர்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம் நகை கடைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் எடுத்துவரப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள 234 கிலோ நகைகளையும், லாரியையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது. மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.