முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 
அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தனித்துப் போட்டியிடுவது குறித்தும் தேமுதிக ஆலோசனை நடத்தி வந்தது. 
இதனிடையே, அமமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. தற்போது தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேசமயம் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →