வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்: முதல்வர் பழனிசாமி
வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும் என எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தர்.
வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும் என எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,
1989 ஆம் ஆண்டு முதல்முறையாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன்.
எடப்பாடி தொகுதி ஏற்றம்பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.
அதிமுக தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிக்கை. அடித்தட்டில் உள்ள மக்கள் கூட தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள்.
அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி.
எங்கள் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.
சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.