முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டிக்கு  திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டிக்கு  திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உசிலம்பட்டி வத்தலக்குண்டு  சாலையில் இருந்து மாட்டு வண்டியில்  ஊர்வலமாக  விவசாயிகள் சின்னமான கரும்புகளை ஏந்தி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றார். 

பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் மற்றும் இரண்டு நபர்கள் அனுமதி அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜ்குமார்  மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் இலக்கிய பண்பாடு பாசறையின் மாநிலச் செயலாளர் கோ.ஐந்நுகோவிலான் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் ராஜவடிவு மற்றும் தொகுதி செயலாளர் தமிழ் செல்வன் உடன் சென்றனர். மேலும் தேர்தல் அலுவலர் முன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.