முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் ஐயப்பன் (அதிமுக) வேட்பு மனு

உசிலம்பட்டி மார்ச் 15 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டிக்கு  திங்கட்கிழமை அதிமுக சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
உசிலம்பட்டியில் ஐயப்பன் (அதிமுக) வேட்பு மனு
பகிர்:

உசிலம்பட்டி மார்ச் 15 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டிக்கு  திங்கட்கிழமை அதிமுக சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சியின் வேட்பாளர் ஐயப்பன் உசிலம்பட்டி மதுரை சாலையில் கீழப்புதூர்  கட்சி அலுவலகத்தைத்  திறந்து வைத்தார் பின்னர்.  

ஊர்வலமாகக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். பின்னர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வேட்பாளர் மற்றும் இரண்டு  நபர்கள் அனுமதி வழங்கப்பட்டது. உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜ்குமார்  மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் மதுரை மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்  ராஜா. சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சை ராஜா. கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

மேலும், அதிமுக சார்பாக மாற்று வேட்பாளராக உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமா ராஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் உடன்  ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துறை தனராஜன் மற்றும் மகேந்திர பாண்டியன் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.