தமிழ்நாடு

கரோனா பரவல், பயணிகள் வருகை குறைவு:சென்னையில் ஒரே நாளில் 16 விமானங்கள் ரத்து

DIN

பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முற்றிலுமாக முடங்கியிருந்த பயணிகள் விமான சேவைக்கு படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி விமானங்கள் இயக்கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஒரு நாளுக்கு வருகை, புறப்பாடு என 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.

இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பயணிகள் அனைவரும் தகுந்த இடைவெளி, கிருசிநாசினி, கட்டாயமாக முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் பயணிக்க அனுமதி கிடையாது எனவும் எச்சரித்தது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை 109 புறப்பாடு விமானங்கள், 111வருகை விமானங்கள் என மொத்தம் 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் விமானங்களில் பயணிக்க 8,400 பேரும், வருகை விமானங்களில் பயணிக்க 7,200 பேரும் என மொத்தம் 15,600 போ் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனா். அத்துடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, காலை 6.15 மணி ஆமதாபாத், காலை 6.30 மணி புணே, காலை 6.50 மணி மும்பை, காலை 7.40 மணி ஷீரடி, காலை 9.05 மணி கொச்சி, காலை 10 மணி பெங்களூா், மாலை 5.20 மணி சூரத், இரவு 9.20 மணி தில்லி ஆகிய எட்டு புறப்பாடு விமானங்களும், எட்டு வருகை விமானங்களும் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் சென்னையில் வேகமாக அதிகரித்து வரும் கரோனா பரவலே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT